ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
01:29 PM Apr 05, 2025 IST
|
Ramamoorthy S
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Advertisement
ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து சரிந்து கீழே விழுந்தார்.
இதனையடுத்து சக மாணவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அக்கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
Advertisement
Advertisement