ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனை நலம் விசாரித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!
புஷ்பா 2 திரைப்பட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனை, நடிகர் அல்லு அர்ஜூன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்தார்.
நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த இவரது மகன் ஸ்ரீதேஜ் ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்கு உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதில் அல்லு அர்ஜுனுக்கு நிரந்தர ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜை, நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் நேரில் சந்தித்துந் நலம் விசாரித்தனர். இதையொட்டி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.