ஹோலி பண்டிகை - எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!
ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Advertisement
இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஹோலி பண்டிகை ஏராளமான மகிழ்ச்சி, நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் செழிப்பு ஆகியவற்றை வண்ணங்களாக கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்த வண்ணங்களின் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் எனறும் அவர் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள பதிவில், வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் நாளாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் கொண்டாடப்படும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் பண்டிகையாக அமையட்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.