1 கோடி பார்வைகளை கடந்த விடாமுயற்சி டிரெய்லர்!
05:26 PM Jan 18, 2025 IST
|
Murugesan M
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
Advertisement
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழனன்று விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லர் வெளியான 30 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையை கடந்தது.
Advertisement
இந்நிலையில் தற்போது வரை 10 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Next Article