செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

1.76 லட்சம் கோடி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை !

06:48 AM Mar 18, 2025 IST | Ramamoorthy S

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது.

Advertisement

காங்கிரஸ் ஆட்சியில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை சுட்டிக்காட்டியது.

அதனடிப்படையில் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2018ம் ஆண்டு சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது.

 

 

Advertisement
Tags :
2G case appealA. Razaappeal filed against the acquittal of A. Raza and KanimozhiDMKFEATUREDKanimozhiKanimozhi in the 2G caseMAIN
Advertisement
Next Article