செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

10:59 AM Dec 07, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி அறுபத்து ஏழு சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

அந்த வகையில், கடந்த 2013-14-ஆம் ஆண்டில் கிடைத்த 466 பில்லியன் டாலரை காட்டிலும்,  2023-24 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 67 சதவீதம் உயர்ந்து, 778 பில்லியன் டாலராக பதிவாகியிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

Advertisement

இதே காலகட்டத்தில் சர்வதேச ஏற்றுமதியில் நாட்டின் பங்கு ஒன்று புள்ளி ஆறு ஆறு சதவீதத்திலிருந்து ஒன்று புள்ளி எட்டு ஒன்று சதவீதமாக அதிகரித்ததாக கூறியுள்ளார்.  இதன்மூலம் சர்வதேச ஏற்றுமதியில் 20-ஆவது இடத்திலிருந்த இந்தியா, 17-ஆவது இடத்துக்கு முன்னேறியதையும் சுட்டிக்காட்டினார்.

Advertisement
Tags :
central minister piyush goyalexports increasedIndiaMAINpiyush goyal
Advertisement