செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீர் வரத்து குறைவு- மூல வைகை ஆற்றில் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் அபாயம்!

03:20 PM Mar 21, 2025 IST | Murugesan M

வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் இன்னும் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் என மயிலாடும்பாறை ஊராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மேகமலை அடர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு, வைகை அணையின் பிறப்பிடமாக விளங்கி வருகிறது.

வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் தண்ணீர் முழுவதுமாக வற்றி, ஆறு வறண்டு விடும் எனவும் மயிலாடும்பாறை ஊராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

மேலும், ஆற்றுப் பகுதிகளில் உள்ள உறைக் கிணறுகளிருந்து வழங்கப்படும் குடிநீரைக் கிராம மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
MAINtamil nadu newsThe water in the Vaigai River will dry up in 10 days!
Advertisement
Next Article