100-வது நாளில் அடியெடுத்து வைத்த டிராகன் திரைப்படம்!
02:12 PM Jun 02, 2025 IST | Murugesan M
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெற்றிகரமாக 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
Advertisement
இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படம் இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement