செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் புகார்?

07:45 PM Mar 31, 2025 IST | Murugesan M

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பயனாளிகளிடம் கமிஷன், பணிக்குச் செல்லாதவர்களுக்கு ஊதியம், அதிக விலைக்குப் பொருட்கள் கொள்முதல் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Advertisement

நூறு நாள் வேலைத் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 112 கோடி ரூபாய்  ஊழல் நடந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

நூறு நாள் வேலைத் திட்ட நிதி, ஊரக வளர்ச்சித் துறையின் பிற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்கு நாட்டிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINTamil NaduCorruption complaint in the 100-day work program?தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாபெரும் முறைகேடு
Advertisement
Next Article