118 தனிமங்களின் பெயர்களை 35.08 விநாடிகளில் கூறி 11-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!
02:56 PM Mar 29, 2025 IST
|
Murugesan M
சிவகங்கையில் 118 தனிமங்களின் பெயர்களை 35 விநாடிகளில் கூறி தனியார்ப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.
Advertisement
சிவகங்கையை அடுத்த குமாரப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளியில், ராகவி என்ற மாணவி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை, வெறும் 35 புள்ளி 08 விநாடிகளில் பார்க்காமல் கூறி சாதனை படைத்துள்ளார்.
Advertisement
முன்னதாக 18 வயதினர் பிரிவில் இந்த சாதனை 47 விநாடிகளில் படைக்கப்பட்டிருந்த நிலையில், மாணவி ராகவி குறைந்த நேரத்தில் இந்த சாதனையைப் படைத்துள்ளது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்யும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement