12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா - 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி!
05:45 PM Oct 26, 2024 IST
|
Murugesan M
12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி இழந்துள்ளது.
Advertisement
புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதல் இன்னிங்சில் 259 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.
Advertisement
ஆனால், இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஜடேஜாவை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 245 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 113 ரன்கள் வித்திசாயத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. .
Advertisement
Next Article