For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருக்குறள் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்து அசத்திய அரசு பள்ளி மாணவி!

12:35 PM Jan 21, 2025 IST | Murugesan M
திருக்குறள் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்து அசத்திய அரசு பள்ளி மாணவி

பாவூர்சத்திரம் அருகே திருக்குறளின் வரிகளால் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்துள்ள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுடலைக்கனி என்பவரின் மகள் நந்திதா, அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

Advertisement

3ஆம் வகுப்பு படிக்கும்போதே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட நந்திதா, மாவட்ட அளவிலான பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார். இந்நிலையில், திருக்குறளில் உள்ள ஆயிரத்து 330 குறள்களை கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

மேலும், சட்டமேதை அம்பேத்கரின் படத்தையும், அவர் இயற்றிய சட்டங்களை கொண்டு வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார். அரசு பள்ளி மாணவிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பது தமது லட்சியம் என மாணவி நந்திதா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement