16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் சேதம்!
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் பெரும் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 16 கோடி மதிப்பீட்டில் நல்லத் தரத்துடன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு கடந்த செப்டம்பரில் திறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்து.
ஃபெஞ்சல் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால், சாத்தனூர் அணையிலிருந்து நான்கு மடங்கு உபரிநீர் திறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் பாலத்தின் மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால், பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.