For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2-வது முறையாக டி20 மகளிர் உலக்கோப்பையை வென்று இந்தியா சாதனை!

11:30 AM Feb 03, 2025 IST | Murugesan M
2 வது முறையாக டி20 மகளிர் உலக்கோப்பையை வென்று இந்தியா சாதனை

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

Advertisement

அதிகபட்சமாக வான் வூர்ஸ்ட் 23 ரன்களும், ஜெம்மா போத்தா 16 ரன்களும் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய இந்தியாவின் கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து, 83 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மட்டுமே இழந்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் அசத்திய கொங்கடி த்ரிஷா, 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சானிகா சால்கேவும் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம், நடப்பு சாம்பியனான இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக டி20 மகளிர் உலக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதனை கெளரவிக்கும் வகையில் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement