2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் : தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போரட்டம்!
05:25 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
அவ்வூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப் பள்ளியில் 39 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நீண்ட நாட்களாகத் தண்ணீர் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தீர்ப்பதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கெங்கரை ஊராட்சி மன்றத்தின் மூலம் பள்ளியில் கிணறு தோண்டப்பட்டது.
Advertisement
இதுதொடர்பாக தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து, தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement