2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஸ்தாகாடு கடற்கரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
Advertisement
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ரஸ்தாகாடு கடற்கரை பகுதியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கின்னஸ் சாதனை முயற்சியாக இந்த பொங்கல் தவிழாவில் 2 ஆயிரத்து 8 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற நிலையில், பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பொங்கல் நிகழ்ச்சியை விமர்சையாக நடத்திய கலப்பை மக்கள் இயக்க தலைவர் பிடி செல்வகுமாருக்கு, அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்தது.