2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
04:18 PM Mar 07, 2025 IST
|
Murugesan M
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Advertisement
தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. அந்த 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளில் தனி அலுவலர்களை நியமனம் செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் கனிம வளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement