செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

07:05 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக “திவ்யா கள்ளச்சி“ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

சென்னையைச் சேர்ந்த சித்ரா என்ற பெண், திவ்யா கள்ளச்சி என்ற யூடியூப் சேனல் நடத்தும் பெண் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் புகாரளித்த சித்ரா என்ற பெண்ணே தனது நண்பரின் மூலம் பெண் யூடியூபரை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லியது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் புகாரளித்த பெண் மற்றும் பெண் யூடியூபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Advertisement
Tags :
MAINSexual harassment of 2 boys: 4 people including 2 women arrested!tamil janam tvtamil nadu news
Advertisement