2 நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் செல்லும் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குவைத்துக்கு செல்லவுள்ளதால் இருநாட்டு உறவும் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
சமீபத்தில் இந்தியா வந்த குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யாஹ்யா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார் அப்போது வளைகுடா நாடுகளில் அமைதி நிலவவும், பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதிலும் இந்தியா தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இதனையடுத்து தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். அதன் பேரில் வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்படுவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி, ஃபார்மா, தொழில்நுட்பம், கல்வி ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பிரதமர் மோடி குவைத்துக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.