2 ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சி இணையதளத்தில் வைரல்!
04:40 PM Mar 21, 2025 IST
|
Murugesan M
2 ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சி இணையதளத்தில் வைரல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இரண்டு முதலைகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
மேல தவர்த்தாம்பட்டு கிராமத்தில் பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த உப்பனாற்றில் 500-க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உப்பனாறு வடிகால் வாய்க்காலில் இரண்டு ராட்சத முதலைகள் சண்டையிடும் காட்சியை அப்பகுதி இளைஞர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement