20 லட்சத்தை எட்டிய முமமொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் - அண்ணாமலை
07:33 AM Mar 19, 2025 IST
|
Ramamoorthy S
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் 20 லட்சத்தை எட்டியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, குழந்தைகளுக்கு சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் 20 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை,
Advertisement
தமிழக மக்களின் அன்புடனும், ஆதரவுடனும் விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம் என தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை நம் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் கொண்டு வருவோம் எனவும் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement