செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

20 லட்சத்தை கடந்த சமக்கல்வி கையெழுத்து இயக்கம் : அண்ணாமலை

04:32 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சம கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கம் 20  லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வித்தியாசமின்றி, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக பாஜக,  சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தாக தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு வைத்துத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தமிழக மக்கள் பேராதரவுடன், களத்திலும், இணைய தளம் வழியாகவும் சேர்த்து, 20 லட்சம் என்ற இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் அன்புடனும் ஆதரவுடனும், விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். சமக்கல்வியான மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Equal Education Movement crosses 20 lakh signatures: AnnamalaiFEATUREDMAINnew education policytn bjptn bjp annamalaiஅண்ணாமலைசமக்கல்வி கையெழுத்து இயக்கம்
Advertisement