200 ரூபாய் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 40 ரூபாய் கேட்டு வாடிக்கையாளரிடம் டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதம்!
பந்தலூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 200 ரூபாய் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 40 ரூபாய் கேட்டு வாடிக்கையாளரிடம் டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் மதுபானம் வாங்க சென்றுள்ளார். அப்போது, 200 ரூபாய் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 40 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என வாடிக்கையாளரிடம் மதுபோதையிலிருந்த டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சிடைந்த வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததுடன், 240 ரூபாய்க்கான ரசீது தாருங்கள் என கேட்டுள்ளார்.
பின்னர், தட்டு தடுமாறி ஒரு வழியாக வாடிக்கையாளரிடம் 240 ரூபாய்க்கான ரசீதை ஊழியர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.