2024-இல் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
01:55 PM Jan 02, 2025 IST
|
Murugesan M
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 -ஆம் ஆண்டில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய மொத்த காணிக்கை ஆயிரத்து 365 கோடி ரூபாய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை திருப்பதி ஏழுமலையானை 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாகவும், 99 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும், மொத்த உண்டியல் காணிக்கையாக ஆயிரத்து 365 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article