2025ம் ஆண்டு இறுதிக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்! : சேகர்பாபு தகவல்
02:39 PM Dec 09, 2024 IST | Murugesan M
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2025 டிசம்பருக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என கூறினார்.
Advertisement
மேலும், தீ விபத்தில் சேதமடைந்த வீர வசுந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Advertisement
Advertisement