For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2025 முதலீடு செய்ய சிறந்த Mutual Fund?

06:15 PM Jan 06, 2025 IST | Murugesan M
2025 முதலீடு செய்ய சிறந்த mutual fund

வெறும் 100 ரூபாய் வைத்தே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல, இந்த புத்தாண்டில், எந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று பொருளாதார வல்லுனர்களின் பரிந்துரைகள் வெளிவந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக கடந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைகள் அதிக அளவிலான ஏற்ற, இறக்கத்தை பதிவு செய்திருந்தது. சந்தை சரிவிலும், இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் துறையில், அதிக லாபத்தை தொடர்ந்து பதிவு செய்துள்ளன.

Advertisement

பொதுவாக, சந்தை மூலதனத்தின் அளவைப் பொறுத்து, பங்கு சந்தையில், நிறுவனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை (Large-cap funds )லார்ஜ் கேப், (Mid -cap funds) மிட் கேப் மற்றும் (small-cap funds) ஸ்மால் கேப் ஃபண்ட்களாகும்

சந்தை மூலதனம் என்பது அந்தந்த நிறுவனத்தின் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் மொத்த பங்குகளின் மதிப்பாகும். சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதல் 100 நிறுவனங்களை Large-cap நிறுவனங்களாக பங்கு பரிவர்த்தனை வாரியமான SEBI பட்டியலிட்டு உள்ளது.

Advertisement

அந்தப் பட்டியலில்,101 முதல் 250 வரை தரவரிசையில் இருக்கும் நிறுவனங்கள் Mid -cap நிறுவனங்களாகும். 251 மற்றும் அதற்கு மேல் உள்ள நிறுவனங்கள் small-cap நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.

மேலும், small-cap நிறுவனங்களில் குறைந்தபட்சம் 65 சதவீத நிதியை முதலீடு செய்யும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்தும் small-cap பரஸ்பர நிதிகளாக கருதப் படுகின்றன.

மியூச்சல் ஃபண்டுகள் முதலீட்டில், ஆல்பா மற்றும் பீட்டா என்று இரண்டு வகை ரிஸ்க் விகிதங்கள் கணக்கிடப் படுகின்றன.

மியூச்சல் ஃபண்டுகள் முதலீட்டில் ஆல்பா விகிதம் அதிகமாக இருந்தால், நீண்ட கால நல்ல வருவாயின் சாத்தியம் அதிகம் என்று கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, 13 small-cap ஃபண்டுகள், நம்பிக்கைக்குரிய ஆல்பா முதலீடுகளாக மாறியுள்ளன. BSE மற்றும் NIFTY ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட மொத்த வருவாய் குறியீடு அளவுகோல்களையும் தாண்டி முன்னேறியுள்ளது.

குறிப்பாக பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட், ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட், மற்றும் டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் நல்ல லாபத்தை தந்துள்ளன.

இந்த நிறுவனங்களின், கடந்த கால செயல்திறன் எதிர்கால முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டில் இதில் முதலீடு செய்யலாம் என்று பொருளாதார வல்லுநர்கள்
சில பரிந்துரைகளைத் தந்துள்ளனர்.

மோதிலால் ஓஸ்வால், பந்தன், டாடா, எச்எஸ்பிசி, மற்றும் Mahindra Manulife மஹிந்திரா மேனு லைஃப் small-cap ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர்.

முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வதும், முதலீட்டு ரிஸ்க்களைக் கருத்தில் கொள்வதும், சரியான நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதும் மிக முக்கியமானதாகும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சென்செக்ஸ் 1,00,000 என்ற முக்கிய மைல்கல்லைத் தாண்டி வளரும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement