2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் - வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!
07:16 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
வங்கதேசத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலை தள்ளிவைப்பதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் மீது தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
Advertisement
அதன்படி, 2026 ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் தேர்தல் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement