2026 தேர்தலில் திமுக தூக்கி எறியப்படும் - எச். ராஜா
04:52 PM Jun 10, 2025 IST | Murugesan M
தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் திமுகவைத் தூக்கி எறிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் நடைபெற்ற வாளுக்கு வேலி பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் எச். ராஜா அளித்த பேட்டியில்,
Advertisement
திராவிட அரசு உளறலில் முதல் இடத்தில் உள்ளது என்றும் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று எச். ராஜா குற்றம்சாட்டினார்.
சமுதாயம் அழிகிற தீய ஆட்சியைத் தருகிறது திமுக அரசு என்றும் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற திமுக அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்றும் 2026 தேர்தலில் திமுக தூக்கி எறியப்படும் என்று எச். ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement