2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்
திருமாவளவன் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், திமுக கூட்டணியில் அவர் தொடர்வாரா என்பதே சந்தேகம்தான் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில்,
ராகுல்காந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் குறை கூறி வருவதாகவும், அவர் கண்ணைத் திறந்து பார்த்தால் தான் நாட்டின் வளர்ச்சி பற்றித் தெரியும் என்றார்.
2026 தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்று கூறியவர், திமுக கூட்டணி சலசலத்து உள்ளதாகவும், திருமாவளவன் அந்த கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் தான் ஏனென்றால் அவர் தடுமாற்றத்தில் உள்ளது என்றும்
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியால் திமுகவினர் தூக்கத்தைத் தொலைத்து உள்ளதாக எல். முருகன் கூறினார்.
மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகத்தினர் கலவரத்தைத் தூண்டும் கட்சியாக உள்ளதாகவும், வரும் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று எல்.முருகன் திட்டவட்டமாக கூறினார்.