2026-இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் - டிடிவி தினகரன் உறுதி!
05:53 PM Nov 08, 2024 IST | Murugesan M
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
Advertisement
வரும் 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெறும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீட்டு பலன் கிடைக்க வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றும் கூறினார்.
Advertisement
அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், மாநில அரசும் செய்யலாம் என்றும் தினகரன் கூறினார்.
Advertisement