செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி - சீமான் உறுதி!

02:57 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபோ, சட்டமோ அல்ல என தெரிவித்தார். ன் எதிரியை நான் தனித்து தான் சந்திப்பேன் என்றும், யாருடனும் கூட்டு சேர்ந்து எதிரியை சந்திக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

திமுக வை வீழ்த்த வேண்டும் என்கிற த.வெ.க தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டை  வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

குற்றவாளிகள் கையில் அதிகாரம் இருப்பதால் தமிழ்நாட்டில் தினமும் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாகவும், குற்றவாளிகளை சுட்டு பிடிப்பது அரசின் இயலாமையை தான் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

குடித்து விட்டு பாட்டிலை கொடுத்தால் ரூ. 10 என்றும், குடித்து விட்டு பாடையில் படுத்தால் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும், இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பாலிசி என்றும் சீமான் கூறினர்.

Advertisement
Tags :
FEATUREDMAINNaam Tamilar katchiseeman presseetTamilar Katchi will contest the 2026 elections alone.
Advertisement