For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

10:41 AM Nov 11, 2024 IST | Murugesan M
2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி   எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது தொடர்பாக  பா அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என தெரிவித்துள்ளார்.

Advertisement

திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக தலைமையை ஏற்கும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும், அதிமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து தற்போத  பேச முடியாது என தெரிவித்தார்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின் என்றும், மக்கள் குறித்து கவலை இல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஸ்டாலின் கவலைப்படுவதாகவும் கூறினார்.

Advertisement

கருணாநிதியின் பேரன் என்பதாலே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்ட நிதி எங்கிருந்து வந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணி உடையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement