2026 மே மாதம் வரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும் - அண்ணாமலை உறுதி!
திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை அக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தான் ராஜ மரியாதை அளிக்கப்படுவதாகவும், ஊழலை தட்டிக் கேட்பவர்களுக்கு சித்ரவதை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
பாஜக தலைவர்களை இரவு 7 மணி வரை தடுத்து வைத்தது ஏன் என்றும், தமிழக காவல்துறை மீது பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.
திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டதாகவும், டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை பாஜக மகளிர் அணியினர் ஒட்டுவார்கள் என்றும், காவல்துறை தூங்க முடியாத அளவிற்கு போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
2026 மே மாதம் வரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும் என்றும், போராட்டம் நடக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஒருவாரத்தில் 5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடுவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.