2040-ல் இந்திய வான் ஆராய்ச்சியாளர்கள் நிலவில் கால் பதிப்பார்கள் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உறுதி!
10:29 AM Nov 10, 2024 IST | Murugesan M
2040-ல் இந்திய வான் ஆராய்ச்சியாளர்கள் நிலவில் கால் பதிப்பார்கள் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Advertisement
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இவற்றில் ககன்யான், சந்திராயன் 4, இந்தியாவிற்கென விண்வெளி நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என்று கூறினார். மேலும், 2040-ல் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisement
Advertisement