27 குடும்பத்தினர் பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடி கொண்டாடிய பொங்கல் விழா!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 27 குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நெற்குப்பை கிராமத்தை சேர்ந்த ராமசாமியின் குடும்பத்தினர் வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமசாமியின் 27 குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் பாரம்பரிய வீட்டில் பொங்கல் பண்டிகையை ஆடி , பாடி வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்து, பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக கூறி வழிபட்டனர். மேலும் கயிறு இழுத்தல் போட்டியில் அனைவரும் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.