27 விஏஓ-க்கள் பணியிடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்!
05:35 PM Mar 24, 2025 IST
|
Murugesan M
மதுரையில் 27 விஏஓ-க்களை திடீர் பணியிட மாற்றம் செய்த வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
மதுரை மாவட்டத்தில் உள்ள 4 கோட்டங்களில் 450-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மதுரை கோட்டத்தில் பணியாற்றி வரும் 147 கிராம நிர்வாக அலுவலர்களில், 27 பேர் முன்னறிவிப்பின்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்த கேள்விகளுக்கு வருவாய்க் கோட்டாட்சியர் ஷாலினி முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
இதனைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விஏஓ-க்களின் பணி இடமாற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement