3 நாட்களில் ரூ.105 கோடி - வசூலை குவிக்கும் விடாமுயற்சி திரைப்படம்!
05:28 PM Feb 09, 2025 IST | Ramamoorthy S
விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், நடிகை திரிஷா ஆகியோரின் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் கடந்த ஆறாம் தேதி ரிலீசானது. ஆக்ஷன் காட்சிகள் வெறித்தனமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களை கூறி வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி, உலகளவில் 3 நாட்களில் இப்படம் 105 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே 61 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement