3 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!
03:27 PM Jan 25, 2025 IST
|
Murugesan M
சேலத்தில் 3 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாயின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
சேலம் குகை பகுதியை சேர்ந்த பசுபதி என்பவருக்கு வெற்றிவேல், வெற்றிமாறன் ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
பசுபதியின் மனைவி சண்முகப்பிரியாவுக்கும், தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதை அறிந்த பசுபதி, தமிழரசனை எச்சரித்து வந்துள்ளார்.
Advertisement
இதனையடுத்து சண்முகப்பிரியா தனது கணவனை பிரிந்து தமிழரசனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தன்னை "அப்பா" என்று அழைக்கக்கூறி 3 வயது சிறுவன் வெற்றிமாறனை தமிழரசன், மதுபோதையில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.
Advertisement
Next Article