For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல் - சவுதி அரேபியாவின் கனவு திட்டம்!

02:59 PM Oct 29, 2025 IST | Murugesan M
350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்   சவுதி அரேபியாவின் கனவு திட்டம்

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்து திடல் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

எண்ணெய் வளங்கள் மட்டுமே நிறைந்துள்ள செளதி அரேபியா, பயணிகளைக் கவரும் வகையில் பல புதிய கட்டுமானங்களை நிறுவி வருகின்றன.

Advertisement

அந்தவகையில், உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் கால்பந்துத் திடல் கட்ட சவுதி திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் உலகின் மிக உயரமான திடல் என்ற பெருமையை இது பெரும். இதற்கு நியோம் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

2027ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2032ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

2034 ஆம் ஆண்டு நடைபெறும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை நியோம் ஸ்டேடியத்தில் நடத்தும் வகையில் பணிகளை முடிக்கச் சவுதி முடிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சவுதி அரேபியாவின் 'விஷன் 2030' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நியோம் ஸ்டேடியம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement