4 மாத கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதன் எதிரொலி : ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு!
06:13 PM Feb 08, 2025 IST
|
Murugesan M
வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, ரயில்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
ரயில்வே காவல்துறை இயக்குநர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் ஒலிபெருக்கி மூலம் இருப்புப்பாதை ரயில்வே போலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக வருங்காலங்களில் முக்கிய ரயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில், இருப்புப்பாதை போலீசாரும் ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வரை பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement