5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
12:28 PM Jun 06, 2025 IST | Murugesan M
நாட்டில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
நாட்டிலேயே அதிகபட்சமாகக் கேரளாவில் ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும்,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement