51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி BRISBANE நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 445 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக TRAVIS HEAD 152 ரன்கள் குவித்த நிலையில், STEVE SMITH 101 ரன்கள் அடித்தார்.
ஆட்டத்தின் 3ம் நாளில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், அவ்வப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுப்மன் கில், விராட் கோலி உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.