55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - ராஜஸ்தானில் தொடங்கியது!
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை சீரமைப்பதற்காக கடந்த ஜூலை 2-ம் தேதி பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் 5 மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைப்பது பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்விக்கி, ஸூமாட்டோ போன்ற உணவு டெலிவரிக்கான வரி விதிப்பு 5 சதவீதம் குறைக்கவும், மின்சார வாகனங்களுக்கான விற்பனை கட்டணம் 18 சதவீதம் உயர்த்தவும் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.