6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.