6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல்!
02:25 PM Jun 04, 2025 IST | Murugesan M
போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
சுமார் 2 வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இதனை ஒப்புக் கொண்டுள்ளன.
Advertisement
இதுகுறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு மீண்டும் தயாராகி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement