For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் - சுமார் 5 லட்சம் பேர் முன்பதிவு!

02:10 PM Nov 14, 2024 IST | Murugesan M
70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம்   சுமார் 5 லட்சம் பேர் முன்பதிவு

70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீட்டுக்கு 5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட்டது.  விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் வருமான அளவுகோலின்றி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்பட்டது.

Advertisement

இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் தங்களது விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து 1.66 லட்சம் முதியவர்கள் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 1.28 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 69 ஆயிரத்து 44 பேரும், குஜராத்தில் 25 ஆயிரத்து 491 பேரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 4.69 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement