For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

8 மாதங்களில் 1,36,000 பேர் பணி நீக்கம் - ஐ.டி நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை!

11:19 AM Sep 10, 2024 IST | Murugesan M
8 மாதங்களில் 1 36 000 பேர் பணி நீக்கம்   ஐ டி நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை

கடந்த 8 மாதங்களில், 422 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்து 36,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில்  பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லாத் துறைகளும் கணிசமான வளர்ச்சியைக் காண்கிறது. ஆனால் தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால், சிறிய சதவீத பணிநீக்கம் கூட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன.

Advertisement

Intel, IBM மற்றும் Cisco போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

2025ம் ஆண்டுக்கான 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவினக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்டெல் நிறுவனம் 15 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

Advertisement

சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 7 சதவீத பேரை உடனடியாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

சீனாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதால், ஐபிஎம் நிறுவனம் சுமார் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

ஜெர்மனி நிறுவனமான Infineon, 1,400 பேர்களைப் பணியில் இருந்து நீக்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் 1,400 ஊழியர்களைக் குறைந்த தொழிலாளர் செலவு உள்ள நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஆக்‌ஷன் கேமரா உற்பத்தியாளரான GoPro நிறுவனம் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் ஊழியர்களில் சுமார் 15 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், தனது ஆப்பிள் புக்ஸ் ஆப்ஸ் மற்றும் ஆப்பிள் புக் ஸ்டோர் குழுக்களை உள்ளடக்கிய அதன் சேவைக் குழுவிலிருந்து சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் அதன் விற்பனைக் குழுக்களை மறுசீரமைப்பதாகக் கூறி, சுமார் 12,500 பணியாளர்களை அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு துணி ஸ்டார்ட்அப் நிறுவனமான ரேஷாமண்டி, அதன் முழு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட், கடந்த இரண்டாண்டு செயல்திறன் மதிப்பாய்வைத் தொடர்ந்து, சுமார் 5 சதவீத பணியாளர்களை குறைத்துள்ளது.

இணைய தேடல் நிறுவனமான பிரேவ், பல்வேறு துறைகளில் இருந்து 27 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பிரேவ் நிறுவனத்தின் மொத்தமுள்ள 191 ஊழியர்களில் இது 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த அக்டோபரில் பிரேவ், அதன் பணியாளர்களில் 9 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ,இந்த ஆண்டின் முதல் நான்கு வாரங்களில், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், டிக்டோக் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் உட்பட கிட்டத்தட்ட 100 தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக சுமார் 25,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. சர்வதேச அளவிலும் ஆண்டு முழுவதும் இந்த போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement