9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் : தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சரவணன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாகத்துறை துணை செயலாளராக பணிபுரிந்த பிரதாப், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த தினேஷ் குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராக பணிபுரிந்த ஷேக் அப்துல் ரகுமான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த தற்பகராஜ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனராக இருந்த மோகனச்சந்திரன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்த சுகுமார், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும்,
தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கூடுதல் இயக்குனராக இருந்த சிவசௌந்தரவள்ளி, திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.