9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது!
01:26 PM Dec 04, 2024 IST | Murugesan M
ஈரோட்டில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
சோலார் பகுதியில் வசித்துவரும் லூயிஸ் என்ற முதியவர், வீட்டின் அருகே வசித்துவந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
Advertisement
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லூயிஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement