90 காலிப்பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடக்கம்!
10:35 AM Dec 10, 2024 IST | Murugesan M
தமிழகம் முழுவதும் 90 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு குரூப் 1 தேர்வை நடத்துகிறது. முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும்.
Advertisement
முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 888 பேருக்கு இன்று முதல் டிசம்பர் 13-ஆம் தேதிவரை முதன்மை தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 19 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement